பொது செய்தி

தமிழ்நாடு

ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

ஈரோடு: அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில், ஈரோடு, மூலப்பாளையம் ரேஷன் கடை முன், ஆர்ப்பாட்டம் நடந்தது. கொரோனா ஊரடங்கால், அனைத்து தரப்பு மக்களும் வேலையிழந்து, வருவாய், உணவுக்கு வழியின்றி உள்ளனர். இதனால் வரும், டிச., மாதம் வரை ரேஷன் கார்டு உள்ள மற்றும் ரேஷன் இல்லாதவர்களுக்கும் அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில், கடுகு, சீரகம், புளி உள்ளிட்ட, 21 வகையான பொருட்களை இலவசமாக வழங்க வேண்டும். ஊரடங்கிலும், மகளிர் குழுவினர், பெண்களிடம் கட்டாய வசூல், வட்டி வசூலிக்கும் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தி, நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோன்ற ஆர்ப்பாட்டம், திண்டல், பாரதி நகர் மாரியம்மன் கோவில் பகுதி ரேஷன் கடைகள் முன்பும் நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X