பொது செய்தி

தமிழ்நாடு

திருநகர் காலனியில் வீடுகள் தனிமை

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி, 518 பேருக்கு கொரோனா உறுதியாகி, 391 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 119 பேர் சிகிச்சையை தொடர்கின்றனர். இதனால், இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், பிற மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரி சாலை, கற்பகம் லே-அவுட் குடியிருப்புகள், திருநகர் காலனி, கற்பக விநாயகர்கோவில் வீதி பகுதியில் உள்ள, 30க்கும் மேற்பட்ட வீடுகளை, கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று தனிமைப்படுத்தி, கட்டை கட்டி அடைத்தனர். இப்பகுதிகளில் வசிக்கும், 80 பேரிடம் பி.சி.ஆர்., பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X