சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஈம காரிய நிகழ்வில் விபரீதம்: தேனீக்கள் கொட்டி ஒருவர் பலி

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

பவானி: அந்தியூர் அருகே, ஈம காரிய நிகழ்வில், தேனீக்கள் கொட்டியதில், ஒருவர் பலியானார்.


அந்தியூர் அருகேயுள்ள செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி, 52; அதே பகுதியில் சலூன் கடை நடத்தி வந்தார். ஈம காரியங்களுக்கும் முகச்சவரம் செய்ய செல்வார். பவானி அருகே, தளவாய்பேட்டை, பவானி ஆற்றங்கரையோரம், நேற்று முன்தினம் ஈம காரிய நிகழ்வாக, சவரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த தைல மரத்தில் இருந்த தேன் கூடு கலைந்து, தேனீக்கள் கொட்ட தொடங்கியது. இதனால் அங்கிருந்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். கந்தசாமியால் ஓட முடியாத நிலையில், முகம், கை, கால்களில் சரமாரியாக தேனீக்கள் கொட்டின. அவரை மீட்டு, ஜம்பை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். மேல் சிகிச்சைக்காக, ஈரோடு அரசு மருத்துவமனை அனுப்பி வைக்கப்பட்டார். அன்று நள்ளிரவில் அவர் இறந்தார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X