சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வேட்டைக்கு சென்றவர் சடலமாக மீட்பு: சிவகிரி போலீசார் விசாரணை

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி அருகே, முயல் வேட்டைக்கு சென்றவர், இரண்டு நாட்கள் கழித்து, தோட்டத்தில் சடலமாக மீட்கப்பட்டார். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி, விளக்கேத்தி பஞ்., ஓலப்பாளையத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 55, கட்டட தொழிலாளி. கடந்த, 19ம் தேதி காலை முயல் வேட்டைக்கு சென்றவர், இரவாகியும் வீடு திரும்பவில்லை. அவரின் மனைவி ஈஸ்வரி, 47, சிவகிரி போலீசில் புகாரளித்தார். இந்நிலையில், 60 வேலம்பாளையம் பஞ்., ஏணிப்பாளி அருகே, ஒரு தோட்டத்தில், அழுகிய நிலையில் பெரியசாமி உடல் நேற்று கிடந்தது. சிவகிரி போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: முயல் வேட்டைக்கு நாய்களுடன், ஓலப்பாளையத்தை சேர்ந்த ரவி, 48, என்பவருடன், பெரியசாமி சென்றுள்ளார். ஒரு முயல் கிடைத்த நிலையில், ரவி வீட்டுக்கு கிளம்பினார். ஆனால், மது போதையில் இருந்த பெரியசாமி, மெதுவாக வருகிறேன் எனக்கூறியதால், ரவி மட்டும் வீடு திரும்பியுள்ளார். தன் வீட்டில் முயல் கறியை சுத்தம் செய்து, பெரியசாமி வீட்டுக்கு ரவி கொண்டு சென்றுள்ளார். அப்போதும் அவர் வராதது தெரியவே, குடும்பத்தாருடன் சேர்ந்து, முயல் வேட்டைக்கு சென்ற பகுதியில், இரண்டு நாளாக தேடியுள்ளனர். இந்நிலையில்தான் பெரியசாமி உடல் தோட்டத்தில் கிடைத்துள்ளது. சாவுக்கான காரணம் குறித்து விசாரணை நடக்கிறது. இவ்வாறு போலீசார் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X