சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் ஸ்டேஷன் வாசலில் விவசாயிக்கு அரிவாள் வெட்டு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

அந்தியூர்: அந்தியூர் அருகே, போலீஸ் ஸ்டேஷன் வாசலில், விவசாயிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. தடுத்த இருவர் காயம் அடைந்தனர். வெட்டிய ஆசாமி சிக்கினார்.


அந்தியூர் அருகே கொழந்தபாளையத்தை சேர்ந்தவர் சின்னராம கவுண்டர், 50; இதே பகுதியில் விவசாயம் செய்கிறார். இவரது உறவினர் முத்துசாமி. இவர் மீது, பணம் கொடுக்கல், வாங்கல் சம்பந்தமாக, ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர், சில நாட்களுக்கு முன் மனு கொடுத்தார். இதுகுறித்து விசாரிக்க, வெள்ளித்திருப்பூர் போலீசார், முத்து சாமியை நேற்று மாலை ஸ்டேஷனுக்கு வருமாறு கூறினர். தம்பி மாது, சின்ன ராமகவுண்டருடன் வந்தவர், ஸ்டேஷனுக்கு வெளியே நின்றார். அப்போது வந்த மர்ம ஆசாமி ஒருவர், சின்ன ராமகவுண்டரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த முத்துசாமி, மாது தடுக்க முயன்றபோது, அவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த ஒரு போலீஸ்காரர், அரிவாளால் வெட்டிய ஆசாமியை மடக்கி பிடித்தார். காயமடைந்த சின்னராம கவுண்டர், ஈரோடு தனியார் மருத்துவமனையில், ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையறிந்த அவரின் உறவினர்கள், போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக, போலீசார் கூறவே, கலைந்து சென்றனர். இதனால் போலீஸ் ஸ்டேஷன் பகுதியில், வெகு நேரம் பரபரப்பு நீடித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X