பொது செய்தி

தமிழ்நாடு

காய்ச்சலுடன் வந்த 2 முதியவர் பலி

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

சேலம்: அரசு மருத்துவமனையில், காய்ச்சலுடன் வந்த இரு முதியவர் உயிரிழந்தனர். அவர்களுக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அரசு மருத்துவமனைகளுக்கு, சளி, இருமல், காய்ச்சல் அறிகுறியுடன் வருவோருக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. செவ்வாய்ப்பேட்டை, கட்ட பொம்மன் தெருவை சேர்ந்த, 73 வயது முதியவர், நேற்று முன்தினம், கடும் காய்ச்சலுடன், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனா பரிசோதனை செய்த பின், காய்ச்சல் வார்டில் சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது. ஆனால், நேற்று காலை, அவர் உயிரிழந்தார். அதேபோல், திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு பகுதியை சேர்ந்த, 60 வயது முதியவர், காய்ச்சலுடன், நேற்று முன்தினம், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரும், நேற்று காலை உயிரிழந்தார். இருவரின் பரிசோதனை முடிவு, இன்னும் வெளிவராததால், கொரோனா உறுதி செய்யப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X