பொது செய்தி

தமிழ்நாடு

தாய், மகள் உள்பட 6 பேருக்கு தொற்று

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

இடைப்பாடி: தாய், மகள் உள்பட ஆறு பேருக்கு, கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இடைப்பாடி, தாவாந்தெரு காட்டுவளவைச் சேர்ந்தவர், 57 வயதுடைய, விசைத்தறி தொழிலாளி. அவரது, 45 வயது மனைவி. இவர்கள் வீட்டுக்கு, தொற்று ஏற்பட்ட நபர் வந்து சென்றார். இந்நிலையில், தம்பதிக்கு, சளி, காய்ச்சல் இருந்ததால், நேற்று முன்தினம், இடைப்பாடி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொண்டனர். அதில், தொற்று இருப்பது, நேற்று உறுதியானது. கடந்த வாரம், பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த ஒருவருக்கு, கொரோனா ஏற்பட்டது. அவர் குடும்பத்தினருக்கு பரிசோதனை செய்ததில், 47 வயதுடைய தாய், அவரது, 29 வயது மகளுக்கு, பாதிப்பு உறுதியானது. மேலும், அம்மன் நகரைச் சேர்ந்த, 50 வயது பெண்ணுக்கும் உறுதியானது. இவர்கள் ஐந்து பேரும், காகாபாளையம், நாலெட்ஜ் பொறியியல் கல்லூரி சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். நெடுங்குளத்தைச் சேர்ந்த, 55 வயது ஆண், உடல்நலக்குறைவால், சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்றார். அங்கு, கொரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதியாக, அங்குள்ள, கொரோனா வார்டுக்கு, நேற்று மாற்றப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X