பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே வீதியில் 13 பேருக்கு பாதிப்பு: மோட்டூர் மக்கள் கலக்கம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

சேலம்: ஒரே வீதியில், 13 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், மோட்டூர் மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.


சேலம், 22வது வார்டு, சிவதாபுரம், மோட்டூரைச் சேர்ந்தவர், 35 வயது ஆண். வெள்ளிப்பட்டறை உரிமையாளரான இவர், மேட்டூர் அருகே, சமீபத்தில் நடந்த துக்க சம்பவத்தில் பங்கேற்றார். அவருக்கு சளி, காய்ச்சல் அறிகுறி இருந்ததால், பரிசோதனை நடத்தப்பட்டதில் கொரோனா உறுதியாகி, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரிடம், அதே வீதியில் வசிக்கும் பல குடும்பத்தினர், வெள்ளி வேலை செய்து வருகின்றனர். அவர்கள் அனைவரையும் சோதனை செய்ததில், 3, 6, 10 வயது சிறுமிகள், 24, 33, 38 வயதுடைய பெண்கள், 24, 26, 30, 32, 35, 55 வயதுடைய ஆண்களுக்கு, கொரோனா இருப்பது, நேற்று உறுதியானது. அனைவரும், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஒரே வீதியில், 13 பேருக்கு தொற்றால், அப்பகுதி மக்கள் கலக்கம் அடைந்துள்ளனர். இதையடுத்து, அப்பகுதி தடை செய்யப்பட்டவையாக அறிவிக்கப்பட்டு, 150க்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மாநகராட்சி சார்பில், நோய் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X