பொது செய்தி

தமிழ்நாடு

தொடக்க, நகர கூட்டுறவு சங்க பணியாளர் இன்று முதல் தொடர் வேலைநிறுத்தம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

சேலம்: தொடக்க, நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர், ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல், தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.


இதுகுறித்து, தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்க பொதுச்செயலர் காமராஜ்பாண்டியன் கூறியதாவது: தொடக்க, நகர கடன் சங்கங்களில், நேரடியாக, அனைத்து வகை பயிர் கடன், குழு கடன் வழங்கப்படும் நிலையில், இனி, மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில், உறுப்பினர் பெயரில், 'மிரர்' கணக்கு தொடங்கி, அதன் மூலம், கடன் பட்டுவாடா செய்யப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், கிராமப்புற மகளிர் குழு உறுப்பினர், ஏழை, எளிய விவசாயிகள், 25 கி.மீ., தொலைவில், நகர் புறங்களில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி கிளைக்கு, பலமுறை அலைக்கழிக்க வேண்டி வரும். இதனால், அந்த கணக்குமுறையை மறுபரிசீலனை செய்து, தற்போது நடைமுறையில் உள்ள கடன் சங்கங்கள் மூலமே, கடன் பட்டுவாடா செய்ய வேண்டும். நகை கடன், 6 சதவீத வட்டியில் வழங்க, நபார்டு வங்கி ஒதுக்கும் நிதி, தொடக்க வேளாண் கடன் சங்கங்களுக்கு கிடைப்பதில்லை. கடன் சங்கங்கள் நலன்கருதி, நபார்டு நிதியை, அனைத்து கடன் சங்கங்களுக்கும் வழங்க, மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவை உள்பட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடக்க, நகர கடன் சங்க பணியாளர் ஜூலை, 24(இன்று) முதல், தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X