பொது செய்தி

தமிழ்நாடு

பக்தர்களை வரவேற்க தயாராகும் மேட்டூர்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

மேட்டூர்: ஆடிப்பெருக்கு பண்டிகைக்கு, பக்தர்களை வரவேற்க, மேட்டூர் நகராட்சி தயாராகிறது. ஆடி, 18, ஆடிப்பெருக்கு என அழைக்கப்படும் பண்டிகைக்கு, சேலம், அதன் சுற்றுப்பகுதி மாவட்டங்களில் இருந்து, லட்சக்கணக்கான பக்தர்கள், மேட்டூர் வந்து, காவிரியாற்றில் புனித நீராடுவர். நடப்பாண்டு கொரோனா பரவலால், இம்மாதம் இறுதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஆடிப்பெருக்கு பண்டிகை, ஆக., 2ல் வருகிறது. ஆகஸ்டில், அரசு ஊரடங்கை தளர்த்த வாய்ப்புள்ளதால், மேட்டூர் காவிரியில் புனித நீராட, ஏராளமான பக்தர்கள் வரக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நகராட்சி சார்பில் பக்தர்களை வரவேற்க, பஸ் ஸ்டாண்ட் முதல் காவிரியாறு வரையான சாலைகளை சுத்தப்படுத்தும் பணி, நேற்று தொடங்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X