பொது செய்தி

தமிழ்நாடு

'பலே' மோசடி நிறுவனம் மீது புகார்: பாதிக்கப்பட்டோருக்கு போலீஸ் அழைப்பு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

சேலம்: 'ஆர்.கே.புரமோட்டார்ஸ்' நிறுவனத்தில், பணம் செலுத்தி பாதிக்கப்பட்டோர், போலீசில் புகார் அளிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து, சேலம் மாநகர, குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில் கூறியதாவது: ஜாகீர்ரெட்டிப்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார், 39. இவர், சேலம், ஸ்வர்ணபுரியில், 'ஆர்.கே.புரமோட்டர்ஸ்' நிறுவனம் நடத்துகிறார். இவரது நண்பர் சதீஷ், 30, பெயரிலும், மற்றொரு நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. இருவரும், மக்களிடம் ஆசை வார்தை கூறி, ஆன்லைனில் முதலீடு செய்தால், பணம் இரட்டிப்பாக தருவதாக கூறி, மோசடி செய்ததாக, மக்களிடம் இருந்து புகார் வருகிறது. இதில், சேலம் தொழிலதிபரிடம், மூன்று கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக புகார் வந்துள்ளது. வழக்கு விசாரணையால், தொழிலதிபரின் பெயர் வெளியிட முடியாத நிலை உள்ளது. அதனால், மக்கள், வியாபாரிகள், தொழிலதிபர், ஆர்.கே.புரமோட்டர்ஸ், அதன் துணை நிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள், அழகாபுரம் போலீஸ் ஸ்டேஷன், மாநகர மத்திய குற்றப்பிரிவு, போலீஸ் கமிஷனர் அலுவலகங்களில் புகார் அளிக்கலாம். அதன் உண்மை நிலை கண்டறியும் வரை, புகார்தாரர் விபரம் ரகசியம் காக்கப்படும். அதனால், பணம், பொருள், நிலம் இழந்தவர் புகார் அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X