பொது செய்தி

தமிழ்நாடு

ஒன்றரை ஆண்டுக்கு பின் மேட்டூர் அணையில் 'தலை' காட்டிய நந்தி

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்ததால், ஒன்றரை ஆண்டுக்கு பின், நந்தி சிலையின் தலை வெளியே தெரிந்தது. மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. அணையின் பண்ணவாடி நீர்பரப்பு பகுதியில், ஜலகண்டேஸ்வரர் கோவில் உள்ளது. நீர்மட்டம், 69 அடிக்கு மேல் உயரும்போது, கோவில் நந்தி சிலை மூழ்கி விடும். கடந்த ஆண்டு பிப்ரவரி இறுதியில், அணை நீர்மட்டம், 69 அடிக்கு கீழ் சரிந்ததால், நந்தி சிலை வெளியே தெரிந்தது. மீண்டும் ஆகஸ்டில் நீர்மட்டம் உயர்ந்ததால், சிலை மூழ்கியது. இந்நிலையில், டெல்டா பாசனத்துக்கு நீர் திறந்ததால், கடந்த மாதம், 12ல், 101 அடியாக இருந்த, மேட்டூர் அணை நீர்மட்டம், நேற்று, 67.54 அடியாக சரிந்தது. இதனால், பண்ணவாடி நீர்பரப்பில் மூழ்கி இருந்த நந்தி சிலையின் தலை, நேற்று முழுமையாக வெளியே தெரிந்தது. நேற்று முன்தினம் வினாடிக்கு, 4,352 கனஅடியாக இருந்த, அணை நீர்வரத்து, நேற்று, 5,081 கனஅடியாக அதிகரித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X