சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குட்கா கடத்தல் விவகாரம்: செவ்வாய்ப்பேட்டை வியாபாரிகளிடம் விசாரிக்க முடிவு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

சேலம்: குட்கா கடத்தல் விவகாரத்தில், செவ்வாய்ப்பேட்டை வியாபாரிகளிடம் விசாரிக்க, போலீசார் முடிவு செய்துள்ளனர்.


டில்லியில் இருந்து, சேலம் வழியாக நெல்லைக்கு, ஹான்ஸ், குட்கா கடத்திய லாரியை, கடந்த ஜூன், 10ல் அன்னதானப்பட்டி போலீசார் மடக்கி, 100 மூட்டைகளை கைப்பற்றினர். அதன் டிரைவரான, சேலம் மாவட்டம், ஆத்தூர், நரசிங்கபுரத்தை சேர்ந்த பிரகாஷ், 27, கிச்சிப்பாளையம் சூர்யா, 22, லாரி உரிமையாளர்களான, சங்ககிரி, செல்லப்பம்பட்டி ராஜேந்திரன், 50, அவரது தம்பி சக்திவேல், 41, ஆகியோரை, போலீசார் கைது செய்தனர். இதில், மொத்த வியாபாரி, நெல்லையை சேர்ந்த குணசீலன், 50, என்பவருக்கு தொடர்புள்ளது என, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின், மொத்த வியாபாரியை மாற்றிவிட்டதாக, புகார் எழ, குற்றப்பிரிவு துணை கமிஷனர் செந்தில் தலைமையில் தனிப்படை அமைத்து, கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அவர்கள் விசாரித்ததில், சேலம், சீல்நாயக்கன்பட்டி மளிகை வியாபாரி குணசேகரன், 50, என தெரிந்தது. இதனால், நீதிமன்றத்தில் அனுமதி பெற்று, நேற்று காலை, மூன்று மணி நேரத்துக்கு மேலாக, குணசேகரனின் வீடு, மளிகை கடைகளில் சோதனை நடந்தது. இந்த சோதனை, குணசேகரனுக்கு முன்கூட்டியே தெரியவந்ததால், எதுவும் சிக்கவில்லை. இதனால், குணசேகரன் கூட்டாளிகள் பிரகாஷ், 28, பாலசுப்ரமணியம், 35, ஆகியோரிடம், தனிப்படை போலீசார் விசாரித்தனர்.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: விசாரணையில், டில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து, குட்கா, ஹான்ஸ் ஆகியவற்றை, சேலம், செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த மொத்த வியாபாரிகள் சதீஷ், பவர்லால், சுனில், ஆனந்தகுமார் மூலம், கடத்தல் தொடர்ந்து நடப்பது தெரிந்தது. இதனால், செவ்வாய்ப்பேட்டை வியாபாரிகளின் கடை, குடோன், வீடுகளில் சோதனை நடத்த, அவர்களிடம் விசாரிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X