பொது செய்தி

தமிழ்நாடு

பொது சுகாதாரத்தை மேம்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

தர்மபுரி: சுதந்திர போராட்ட வீராங்கனை கேப்டன் லட்சுமியின், நினைவு தினத்தையொட்டி, பொதுசுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர், தர்மபுரி செங்கொடிபுரத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ஜெயா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், அரசு தாலுகா தலைமை மருத்துவமனைகளில், கொரோனா பரிசோதனை துவங்க வேண்டும். தேவைக்கேற்ப மருத்துவர், செவிலியர் சுகாதார பணியாளர்களை நியமிக்க வேண்டும். கொரோனா காலத்தில் தனியார் மருத்துவமனை இயங்குவதை, உறுதிபடுத்த வேண்டும். தமிழக அரசு கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில், சுகாதார ஊழியர்கள் அனைவருக்கும் ஊக்கத்தொகையாக, ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும். பொது சுகாதார கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்பது உட்பட, பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. முன்னதாக, சுதந்திர போராட்ட வீராங்கனை கேப்டன் லட்சுமியின் உருவப்படத்துக்கு, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், மாவட்ட செயலாளர் கிரைஸாமேரி, மாவட்ட துணைத்தலைவர் பூபதி உட்பட, பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X