பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கல்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி அடுத்த, மூக்கனஹள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியருக்கு, பள்ளி தலைமையாசிரியர் சின்னமாது தலைமையில், உலர் உணவு பொருள்கள் வழங்கப்பட்டன. தமிழகத்தில், கொரானா தொற்று பரவல் காரணமாக, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு அரசு ஆரம்ப பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. இப்பள்ளிகளில், சத்துணவு உண்ணும் மாணவ, மாணவியருக்கு, தமிழக அரசின் சார்பில், உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, தர்மபுரி அடுத்த மூக்கனஹள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை பயிலும், 80க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு நேற்று, உலர் உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. பொறுப்பாசிரியர் விக்ரமன், ஆங்கில பட்டதாரி ஆசிரியை சுபாஷினி உள்பட, பலர் இதில் கலந்து கொண்டர். மாணவர்கள், சமூக இடைவெளியில் நின்று, பொருட்களை வாங்கிச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X