பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரி மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று, 22 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த, இரு தினங்களுக்கு முன், கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த, இரு நாட்களாக மாவட்டத்தில் மொத்தம், 12 பேர் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், மாவட்ட மக்கள் நிம்மதியடைந்தனர். இந்நிலையில் நேற்று, பெங்களூருவில் இருந்து நல்லம்பள்ளி அடுத்த பாலவாடிக்கு வந்த, 32 வயது வாலிபர் மற்றும், 27 வயதுடைய அவரது மனைவிக்கு கொரோனா உறுதியானது. மேலும், காரிமங்கலத்தில் கொரோனாவால் பாதித்தவர்களிடம் தொடர்பிலிருந்த, 50 வயது பெண், 47 வயது ஆண் உட்பட, மாவட்டத்தில் நேற்று, 22 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும், தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள, கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் கடந்த, இரு நாட்களாக, கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் இருந்த நிலையில், நேற்று, 22 பேர் பாதிக்கப்பட்டதால், மாவட்ட மக்கள், பீதி அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X