பொது செய்தி

தமிழ்நாடு

சொத்தை பறித்துக்கொண்ட மகன்கள்; நடவடிக்கை கோரி பெற்றோர் புகார்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

அரூர்: சொத்தை பறித்துக்கொண்டு, எந்த உதவியும் செய்யாத மகன்கள் மீது, நடவடிக்கை எடுக்கக்கோரி, அரூர் சப் - கலெக்டர் பிரதாப்பிடம், பெற்றோர் புகார் மனு அளித்தனர்.


இது குறித்து, விவசாயி சின்னதுரை, அமுதா தம்பதியர் அளித்துள்ள, புகார் மனுவில் கூறியுள்ளதாவது: அரூர், ஆர்.எஸ்.தொட்டம்பட்டியில் வசிக்கிறோம். 60 வயதுக்கு மேற்பட்ட எங்களுக்கு, ஹரிக்குமார், சிவக்குமார் இரு மகன்கள். மூத்த மகன் ஹரிக்குமார் சொந்தமாக லாரிதொழில் செய்கிறார். இளைய மகன் சிவக்குமார் திருப்பூரில், ஒரு தனியார் பனியன் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இருவரும் வங்கியில் கடன் வாங்க வேண்டும் என கூறியதால், எங்கள் பெயரில் இருந்த, 2.50 ஏக்கர் நிலைத்தை, அவர்களது பெயருக்கு பாகப்பிரிவினை செய்து கொடுத்தோம். அதேபோல், மொரப்பூரில் தனியார் ஒருவரிடம், 20 லட்சம் ரூபாய் கடன் பெற்று, இருவருக்கும் தலா, 10 லட்சம் ரூபாய் வீதம் கொடுத்தேன். ஆனால், கடனாக வாங்கிய பணத்தை மகன்கள் இருவரும் திருப்பி கொடுக்க மறுக்கின்றனர். மேலும், எங்கள் இருவருக்கும், உணவு கொடுக்காமல், வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். இதனால், நண்பர் ஒருவரின் வீட்டில் அடைக்கலம் அடைந்துள்ளோம். வாழ்வாதாரத்துக்கு வழியில்லாமல் உள்ள எங்களுக்கு, மகன்களிடமிருந்து பணம் மற்றும் சொத்துக்களை மீட்டுத் தர வேண்டும். வயது முதிர்ந்த நேரத்தில், பெற்றோருக்கு உணவு வழங்காமலும், பராமரிக்காத எங்கள் மகன்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X