பொது செய்தி

தமிழ்நாடு

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

தர்மபுரி: தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி, அனைத்து பணியாளர்கள் சங்கம், எஸ்.ஏ.டி., 383 சார்பில், ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று முதல், காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, இச்சங்கத்தின், தர்மபுரி மாவட்ட கிளை, மாவட்ட செயலாளர் நரசிம்மன் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்நாடு மாநில, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் எஸ்.ஏ.டி., 383 தொழிற்சங்கம் சார்பாக, ரேஷன் கடை பணியாளர்களுக்கு, கொரோனா காலத்தில் சிறப்பு காப்பீடு, போக்குவரத்துப்படி, ஊதிய உயர்வு மற்றும் அனைத்து கடன்களும் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமே, தொடர்ந்து பட்டுவாடா செய்ய அனுமதிக்க வேண்டும். மேலும், ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இன்று(24) முதல் தமிழகத்தில் உள்ள, 4,500 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள் அனைவரும் பங்கேற்கும், மாநிலம் தழுவிய தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடக்க உள்ளது. இதில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள, 131 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பணியாளர்கள், அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X