சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மது விற்ற 6 பேர் கைது

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

அரூர்: பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த பி.பள்ளிப்பட்டியில், நேற்று காலை, 10:00 மணிக்கு, அரூர் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் ரங்கசாமி தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, டாஸ்மாக் மதுபானங்களை பதுக்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்த சக்கு, 46, என்ற பெண்ணை கைது செய்தனர். இதேபோல், துறிஞ்சிப்பட்டியில் மது விற்ற சந்திரா, 63, பத்தலஹள்ளி செல்வமணி, 60, சென்னப்பன், 33, ஆகியோரை கைது செய்தனர். ஒடசல்பட்டி கூட்ரோட்டில் மது விற்ற செல்வம், 55, கேத்துரெட்டிப்பட்டி பச்சியம்மாள், 56 ஆகிய இருவரையும் கடத்தூர் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 150 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X