சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தட்டுப்பாடின்றி குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

தர்மபுரி: தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்கக்கோரி, எ.கொல்லஹள்ளியை சேர்ந்த பெண்கள், காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தர்மபுரி அடுத்த, எ.கொல்ல ஹள்ளியில், 400க்கும் மேற்பட்ட குடியிருப்புக்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ளவர்களுக்கு, பஞ்., நிர்வாகம் சார்பாக, இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, தெருவில் அமைத்துள்ள குடிநீர் குழாய்கள் மூலம் குடிநீர் வினியோகம் நடக்கிறது. இந்நிலையில், கடந்த ஒரு மாதத்துக்கு மேல், பஞ்., நிர்வாகம் சார்பில், மிக குறைந்தளவு மட்டும் தண்ணீர் வினியோகம் நடக்கிறது. இதனால், கிராம மக்களுக்கு, ஒரு வீட்டுக்கு அதிகபட்சமாக, மூன்று குடம் குடிநீர் மட்டுமே கிடைக்கிறது. இதனால், மக்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவித்து வருகின்றனர். மேலும், கொரோனா ஊரடங்கால் வேலைவாய்ப்பு இழந்துள்ள மக்கள், குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுகுறித்து பஞ்., நிர்வாகம் உட்பட, அரசு அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், அதிருப்தியடைந்த, எ.கொல்லஹள்ளி கிராம மக்கள் நேற்று காலை, 9:00 மணிக்கு, தர்மபுரி - எ.கொல்லஹள்ளி சாலையில், காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து அங்கு சென்ற பஞ்., நிர்வாகத்தினர், போதிய குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்ததை அடுத்து, கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X