பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதுகாப்பு கோரி டாஸ்மாக் பணியாளர்கள் மனு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கொரோனா பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் கோரி, டாஸ்மாக் பணியாளர்கள் மனு அளித்தனர். கிருஷ்ணகிரி மாவட்ட டாஸ்மாக் விற்பனையாளர்கள், உதவி விற்பனையாளர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கத்தின் மாநில செயலாளர் அப்துல் கலீல் தலைமையில், டாஸ்மாக் பணியாளர்கள் டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் நேற்று, மனு ஒன்றை அளித்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: கொரோனாவால், மாநில அளவில் டாஸ்மாக் பணியாளர்கள் பலர் பாதித்த நிலையில், ஐந்து பேர் இறந்துள்ளனர். அவர்களின் குடும்பத்தினரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். பணியாளர்களின் குடும்பத்துக்கு ஏற்படும் சிகிச்சை செலவுகளை, அரசே ஏற்க வேண்டும். பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும், 50 லட்சம் ரூபாய் காப்பீடு வழங்க வேண்டும். இறந்த பணியாளர்கள் மற்றும் கொரோனாவில் பாதிப்பவரின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு, வாரிசு வேலை வழங்க வேண்டும். அனைத்து பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியமாக மாதம், 10 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். பணியாளர்களுக்கு, சானிடைசர், மாஸ்க், கபசுர குடிநீர், ஊட்டச்சத்து மாத்திரைகள் மற்றும் கையுறைகளை வழங்க வேண்டும். முக்கிய கோரிக்கையான, பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் அலுவலகத்தின் முன், கோஷங்களை எழுப்பினர். மாவட்ட தலைவர் மாதப்பன், நிர்வாகிகள் குமார், சபாபதி உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X