பொது செய்தி

தமிழ்நாடு

தேசிய ஊரக வேலையை ஆளும் கட்சியினருக்கு வழங்குவதை கண்டித்து பஞ்., தலைவர்கள் தர்ணா

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: காவிரிப்பட்டத்தில், தேசிய ஊரக வேலை வாய்ப்பை, ஆளும் கட்சியினருக்கு வழங்குவதை கண்டித்து, தி.மு.க.,வை சேர்ந்த பஞ்., தலைவர்கள், நேற்று, தர்ணாவில் ஈடுபட்டனர்.


கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியத்தில், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில், வேலை வழங்கவில்லை என, தி.மு.க.,வை சேர்ந்த பஞ்., தலைவர்கள் புகார் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், நேற்று காலை, ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியம் தலைமையில், தி.மு.க.,வை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும், 23 பஞ்., தலைவர்கள், பி.டி.ஓ., அலுவலகம் முன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து பஞ்., தலைவர்களின் கூட்டமைப்பினர் கூறியதாவது: காவேரிப்பட்டிணம் ஊராட்சி ஒன்றிய பஞ்சாயத்துக்களில், தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில், வழங்கப்பட்ட திட்டப் பணிகள் முறையாக வழங்குவதில்லை. பி.டி.ஓ., வேடியப்பன், யாருக்கும் தகவல் தெரிவிக்காமல், பணியாணை வழங்காமல், ஒன்றியக்குழு தலைவரோடு சேர்ந்து, ஆளும் கட்சி பிரமுகர்களுக்கே பணி வழங்க வேண்டும் என, பஞ்., தலைவர்களை மிரட்டுகின்றனர். பஞ்., தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து சென்று கேட்டபோது, அவ்வாறு தர இயலாது என, பி.டி.ஓ., திட்டவட்டமாக கூறிவிட்டார். எனவே, பஞ்., தலைவர்களுக்கு உண்டான பணியை வழங்க, ஆவண செய்ய வேண்டும். மேலும் பஞ்., பணிகள் சிறப்பாக நடக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தவறும் பட்சத்தில், பஞ்., தலைவர்களின் கூட்டமைப்பு சார்பில், அறவழியில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X