சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கார் சக்கரத்தில் சிக்கி சிறுமி பலி

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

வேலூர்: வேலூர் காகிதப்பட்டரையை சேர்ந்தவர், செந்தில்குமார், 36; இவரது மனைவி கவிதா, 28; இருவரும் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளர்கள். இவர்களுக்கு மித்ரா, 6, சாரா, 4, என இரு மகள்கள். அதே பகுதியை சேர்ந்தவர் மணி 45; அவரது மகள், கீர்த்தனா, 5; நேற்று முன்தினம் இரவு, 8:00 மணிக்கு, சாராவும், கீர்த்தனாவும் வீட்டருகே நிறுத்தியிருந்த ஒரு காருக்கு பின்னால் விளையாடி கொண்டிருந்தனர். அதை கவனிக்காத டிரைவர் ஈசாக், 35, காரை பின்னால் நகர்த்தி உள்ளார். இதில், சிறுமிகள் மீது காரின் பின்சக்கரம் ஏறியது. அங்கிருந்தவர்கள் சிறுமியரை மீட்டு, வேலூர் சி.எம்.சி., மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் சிறுமி சாரா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். படுகாயமடைந்த சிறுமி கீர்த்தனா, சி.எம்.சி.,யில் அனுமதிக்கப்பட்டார். வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவர் ஈசாக்கை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X