சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமி பாலியல் பலாத்காரம்: வாலிபர் மீது 'போக்சோ'

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

செய்யாறு: செய்யாறு அருகே, சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, பலாத்காரம் செய்து, வேறொரு பெண்ணை திருமணம் செய்த வாலிபரை, போக்சோவில் போலீசார் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாற்றை சேர்ந்தவர், 17 வயது சிறுமி. தவசி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி, 25. சிப்காட்டில் உள்ள ஷூ நிறுவனத்தில் பணி செய்து வருகிறார். இருவரும், கடந்த ஓராண்டாக காதலித்துள்ளனர். அப்போது, கிருஷ்ணமூர்த்தி திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியுடன் அடிக்கடி தனிமையில் இருந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன் சிறுமி, கிருஷ்ணமூர்த்தியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள கேட்டார். காலம் கடத்தி வந்த கிருஷ்ணமூர்த்தி, திடீரென தன் உறவினர் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இது குறித்து கேட்ட சிறுமிக்கு, கிருஷ்ணமூர்த்தி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து சிறுமி, செய்யாறு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரித்து கிருஷ்ணமூர்த்தியை, போக்சோவில் கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
25-ஜூலை-202007:11:01 IST Report Abuse
Mani . V இது போன்ற அயோக்கியன்களுக்கு "வெட்டி" விட முடியாதா? அட போங்கய்யா நீங்களும், உங்கள் நடவடிக்கையும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X