பொது செய்தி

தமிழ்நாடு

அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர விழா: விநாயகர் பூஜையுடன் நேற்று துவக்கம்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று, (24ல்,) ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள நிலையில், நேற்று விநாயகர் யாக சாலை பூஜையுடன் விழா தொடங்கியது. கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச், 24 முதல், அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதிக்கப்படுவதில்லை. சிவாச்சாரியார்களை கொண்டு, வழக்கமாக சுவாமிக்கு நடக்கும் தினசரி ஆறு கால பூஜை நடந்து வருகிறது. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு அறநிலையத்துறை சார்பில், அனைத்து கோவில்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், கோவில்களில் பக்தர்கள் இல்லாமல் பாரம்பரிய விழாக்களை நடத்தி கொள்ளலாம். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். உபயதாரர்கள், பக்தர்களை அனுமதிக்கக்கூடாது, ஆன்லைன் மூலம், பக்தர்கள் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யலாம் என, குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, திருவண்ணா மலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், ஆடிப்பூர விழாவையொட்டி இன்று, அம்மன் சன்னதியில் காலை, 5:30 மணிக்கு மேல், 7:00 மணிக்குள் கடக லக்னத்தில் கொடியேற்று விழா நடக்கிறது. இதை முன்னிட்டு, விழா சிறப்பாக நடக்க நேற்று மாலை அருணாசலேஸ்வரர் கோவிலில், விநாயகர் யாகசாலை பூஜை வழிபாட்டுடன் தொடங்கியது. தொடர்ந்து, வாஸ்து சாந்தி, மிருத்யுசங்கிரகணம், பூஜைகள் நடந்தன. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து பத்து நாட்கள், கோவில் வளாகத்தில் அம்மன் வலம் வருவார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X