நடிகை வனிதா மீது தஞ்சை போலீசில் புகார்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நடிகை வனிதா மீது தஞ்சை போலீசில் புகார்

Added : ஜூலை 24, 2020
Share

தஞ்சாவூர்: 'தஞ்சாவூர்காரர்களுக்கு, இரண்டு மனைவியெல்லாம் சகஜம்' என, பேசிய நடிகை வனிதா மீது, பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சியினர், போலீசில் புகார் அளித்துள்ளனர்.


நடிகை வனிதா, மூன்றாவது திருமணம் செய்திருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியது. சமீபத்தில் அவர், 'தஞ்சாவூருகாரங்க, இரண்டு மனைவி வைத்துக் கொள்வது எல்லாம் சகஜம் தான். என் தந்தை விஜயகுமாருக்கு கூட, இரண்டு மனைவி தான்' என, பேசிய வீடியோ, சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், பா.ஜ., கலை, இலக்கிய துறையின், தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ராஜா, கலெக்டர் கோவிந்தராவ் மற்றும் எஸ்.பி., தேஷ்முக் சேகர் சஞ்சய் ஆகியோரிடம், வனிதா மீது நேற்று புகார் அளித்துள்ளார். இதேபோல், இளைஞர் காங்கிரஸ் கட்சியின், தஞ்சாவூர் மாவட்ட செயலர் சிவா, பட்டுக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில், நடிகை வனிதா மீது புகார் அளித்தார். ராஜா கூறுகையில், ''தஞ்சை மக்களை, மற்ற மாவட்ட மக்கள், தவறான கண்ணோட்டத்தில் பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தஞ்சாவூர் மக்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும். அவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், போராட்டம் நடத்தப்படும்,'' என்றார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X