பொது செய்தி

தமிழ்நாடு

ஆக.,1 முதல் 14 'டிவி' சேனல்கள் மூலம் கல்வி கற்க ஏற்பாடு: செங்கோட்டையன்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

கோபி: தமிழகத்தில், வரும் ஆக.,1ம் தேதி முதல், 14 தனியார், 'டிவி' சேனல்கள் மூலம், அரசு பள்ளி மாணவர்களுக்கு, பாடங்கள் கற்றுத்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.


ஈரோடு மாவட்டம், நம்பியூரில், அமைச்சர் நேற்று கூறியதாவது: தமிழகத்தில், வரும் ஆக.,1ம் தேதி முதல், 14 தனியார், 'டிவி' சேனல்கள் மூலம், அரசு பள்ளி மாணவர்களுக்கு, பாடங்கள் கற்றுத்தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எந்த சேனலில், எந்தெந்த வகுப்புக்கு, எத்தனை மணிக்கு, பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன என்ற விபரம் அடங்கிய அட்டவணை தயாரிக்கப்படுகிறது. இந்தியாவிலேயே முதன் முறையாக, 'டிவி' மூலமாக கல்வியை கற்றுத்தரும், ஒரே மாநிலம் தமிழகம் தான். பிளஸ் 2 வகுப்பினர், 'வைபை' வசதி மூலம், தங்கள் பாடத்திட்டத்தை பதிவிறக்கம் செய்து, கற்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல் ஒன்று முதல், பிளஸ் 2 வகுப்பு வரை, 'கியூ ஆர்' கோடு முறையில், பாடங்களை போதிக்கும், ஒரே மாநிலம், தமிழகம் மட்டுமே. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X