பெண்ணின் ஆபாசப்படத்தை இணையத்தில் வெளியிட்டவருக்கு 34 ஆண்டு சிறை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண்ணின் ஆபாசப்படத்தை இணையத்தில் வெளியிட்டவருக்கு 34 ஆண்டு சிறை

Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (1)
Share
நாமக்கல்: இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து, இணையதளத்தில் வெளியிட்டவருக்கு, 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். கந்துவட்டி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த, 2009ல் இவரிடம் கடன் வாங்கிய இளம்பெண் ஒருவரை, ரவி என்பவருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து,

நாமக்கல்: இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோ எடுத்து, இணையதளத்தில் வெளியிட்டவருக்கு, 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.


நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார். கந்துவட்டி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். கடந்த, 2009ல் இவரிடம் கடன் வாங்கிய இளம்பெண் ஒருவரை, ரவி என்பவருடன் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்து, இணையதளத்தில் வெளியிட்டார். இதுகுறித்து, அந்த பெண் அளித்த புகாரையடுத்து, இருவரையும் பள்ளிபாளையம் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு, நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடந்தது வந்தது. விசாரணை முடிந்த நிலையில், நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சிவக்குமாருக்கு, ஏக காலத்தில், 34 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும், 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மற்றொரு குற்றவாளியான ரவி, வழக்கு நடந்து கொண்டிருக்கும்போதே இறந்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X