பொது செய்தி

தமிழ்நாடு

போலி ரசீது மோசடியில் சிக்கிய 'டீன்' சஸ்பெண்ட்: பெரியார் பல்கலை துணைவேந்தர் நடவடிக்கை

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

சேலம்: பெரியார் பல்கலையில், போலி ரசீது மோசடியில் சிக்கிய, டீன் கிருஷ்ணகுமார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.


சேலம், பெரியார் பல்கலை, அறிவியல் துறை, 'டீன்' பதவி வகித்தவர், பேராசிரியர் கிருஷ்ணகுமார், 60. இவர், இயற்பியல் துறைத்தலைவராக இருந்தபோது, ஸ்டேஷனரி, ஆய்வு கூடத்துக்கு, பொருட்கள் வாங்கியதாக சமர்ப்பித்த ரசீது போலி என்றும், அதில் குறிப்பிட்ட கடை முகவரியில் குடியிருப்புகள்தான் உள்ளன என்றும், 2013ல், 'காலைக்கதிர்' நாளிதழில், செய்தி வெளியானது. இதையடுத்து, ஆய்வு நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், பதிவாளர் அலுவலகத்திலிருந்த போலி ரசீதுகளை கைப்பற்றினர். ஆதாரத்துடன் சிக்கியதால், அப்போதைய துணைவேந்தர் முத்துச்செழியன், 2013 செப்., 6ல், கிருஷ்ணகுமாரை, 'சஸ்பெண்ட்' செய்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைத்து உத்தரவிட்டார். ஆனால், முத்துச்செழியன் பதவிக்காலம் முடிந்த நிலையில், பல்கலை ஆசிரியர் சங்க நிர்வாகியாக இருந்த கிருஷ்ணகுமார், மாணவர்கள், ஆசிரியர்களை தூண்டிவிட்டு, உள்நோக்கத்துடன், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதாக கூறி, சங்கம் மூலம் போராட்டம் நடத்த தூண்டுகோலாய் இருந்தார். அப்போது, உயர்கல்வித்துறை தலையீட்டில், 'சஸ்பெண்ட்' உத்தரவு நிறுத்திவைக்கப்பட்டது. 'ஜோதி பேப்பர் மார்ட், சாய் சயின்டிபிக் நிறுவனம், ராசி சயின்டிபிக் சப்ளையர்ஸ்' பெயர்களில், இல்லாத கடைகளின் பெயரில் அச்சடித்து வழங்கப்பட்டிருந்த, 868 ரசீதுகள் போலி என, ஆய்வில் கண்டுபிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், நம்பிக்கை மோசடி, குற்றச்செயலில் ஈடுபடுதல், அரசு ஊழியர் தன் பொறுப்பை தவறாக பயன்படுத்தல், பொய் ஆவணம் தயாரித்தல், ஏமாற்றும் நோக்கில் செயல்படுதல், பொய் ஆவணத்தை உண்மை என உறுதிப்படுத்தல், ஊழல் தடுப்பு சட்டம் பிரிவுகளில், வழக்குப்பதிந்தனர். இதில், முன்ஜாமின் பெற்ற கிருஷ்ணகுமார், தொடர்ந்து இயற்பியல் துறை பேராசிரியராகவும், பதவி உயர்வு பெற்று, அறிவியல் துறை டீனாகவும் பதவி வகித்தார். துறை ரீதியாக, தன்மீது நடவடிக்கை எடுக்காதபடி, பல்வேறு வகையில் முட்டுக்கட்டை போட்டு வந்தார். இந்நிலையில், அவர், வரும், 31ல், இவர் ஓய்வு பெற இருந்தார். ஊழல் வழக்கு நிலுவையில் இருப்பதால், சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க, பல்கலை நிர்வாகத்திடம், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கடிதம் மூலம் அறிவுறுத்தினர். இதையறிந்த சிண்டிகேட் உறுப்பினர்கள் சிலர், கிருஷ்ணகுமாரை, 'சஸ்பெண்ட்' செய்யக்கூடாது என, துணைவேந்தரிடம், மனு அளித்தனர். இருப்பினும், துணைவேந்தர் குழந்தைவேல், குற்ற வழக்கு நிலுவையில் உள்ளதால், கிருஷ்ணகுமாரை, 'சஸ்பெண்ட்' செய்து, நேற்று உத்தரவிட்டார். இதே பாணியில், போலி ரசீது அச்சடித்து மோசடி செய்த, மேலும் சில பேராசிரியர்கள் மீது வழக்குப்பதிய, லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X