நளினிக்கு ஒரு மாதம் சலுகைகள் ரத்து: வேலூர் சிறை துறை நிர்வாகம் அதிரடி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நளினிக்கு ஒரு மாதம் சலுகைகள் ரத்து: வேலூர் சிறை துறை நிர்வாகம் அதிரடி

Added : ஜூலை 24, 2020
Share
வேலூர்: ராஜிவ் கொலையாளி நளினிக்கு, சிறையில் ஒரு மாதம் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, வேலூர் பெண்கள் சிறையில் உள்ள, தனி செல்லில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் செல்லில் இருந்து வெளியே செல்லாமல் இருக்க, கிருஷ்ணகிரியை சேர்ந்த ராதா என்ற ஆயுள் தண்டனை கைதி நளினியுடன் தங்கியிருந்தார். கடந்த, 21ல் இரவு, 9:00

வேலூர்: ராஜிவ் கொலையாளி நளினிக்கு, சிறையில் ஒரு மாதம் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.


முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, வேலூர் பெண்கள் சிறையில் உள்ள, தனி செல்லில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் செல்லில் இருந்து வெளியே செல்லாமல் இருக்க, கிருஷ்ணகிரியை சேர்ந்த ராதா என்ற ஆயுள் தண்டனை கைதி நளினியுடன் தங்கியிருந்தார். கடந்த, 21ல் இரவு, 9:00 மணிக்கு ராதாவுக்கும், நளினிக்கும் தகராறு ஏற்பட்டது. அது குறித்து விசாரிக்க, சிறை அலுவலர் அல்லிராணி சென்ற போது, சேலையால் தன் கழுத்தை இறுக்கி நளினி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து, சிறைத்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில், வேண்டுமென்றே சிறை அலுவலர்களை, மன உளைச்சல் ஏற்படுத்தும் விதத்தில், நளினி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, நளினிக்கு ஒரு மாதம் சலுகைகள் ரத்து செய்து, சிறைத்துறை அதிகாரிகள் நேற்று உத்தரவிட்டனர்.

பெண்கள் சிறை அதிகாரிகள் கூறியதாவது: நளினி, அவரது கணவர் முருகன் சந்திப்பு ரத்து, நளினியை உறவினர்கள் சந்திக்கவும், பொருட்கள் வழங்கவும் தடை விதிக்கப்படுகிறது. மேலும், நளினி அடைக்கப்பட்டுள்ள செல்லில் இருந்து வெளியே வருவது போன்ற சலுகைகள், ஒரு மாதம் ரத்து செய்யப்படுகிறது. நளினியுடன் தங்கியிருந்த கைதி ராதா மாற்றப்பட்டு, வேறொருவர் தங்கவைக்கப்பட்டுள்ளார். நளினி தற்கொலை மிரட்டல் குறித்து, விரிவான விசாரணை நடத்தப்பட்டு மத்திய, மாநில அரசுகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளன. நளினியை புழல் சிறைக்கு மாற்ற, அவரது தாய் பத்மா சிறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். புழல் சிறைக்கு மாற்றுவது குறித்து, உயர் அதிகாரிகள் தான் முடிவு செய்வர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X