சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கைதிக்கும் கொரோனா: விசாரித்த அதிகாரிக்கும் கொரோனா!

Updated : ஜூலை 24, 2020 | Added : ஜூலை 24, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
Sathankulam case, Sathankulam custodial death, coronavirus, covid 19, சாத்தான்குளம், சிபிஐ_அதிகாரிகள், கொரோனா

திருநெல்வேலி: சாத்தான்குளம் வழக்கில் போலீசார்களிடம் விசாரணை நடத்திய குழுவில் இருந்த சிபிஐ அதிகாரிகள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிறப்பு எஸ்.ஐ பால்துரைக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில், ஜூன் 19ல் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட வியாபாரி ஜெயராஜ், 60; மகன் பெனிக்ஸ், 31 ஆகியோர், போலீஸ் தாக்குதலில் இறந்தனர். இது தொடர்பாக, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சிறப்பு எஸ்.ஐ., பால்துரை, எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், போலீஸ்காரர்கள் என, 10 போலீசார் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை தற்போது, சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


latest tamil news



இந்நிலையில், போலீசாரிடம் விசாரணை நடத்திய குழுவில் இருந்த சிபிஐ அதிகாரிகள் 2 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதால், அவர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில், இருவருக்கும் நேற்று முன்தினம் (ஜூலை 22) தொற்று உறுதியானதால், மற்ற சிபிஐ அதிகாரிகளுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில், விசாரணை குழுவில் உள்ள மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தொற்று பாதித்த இருவரும் மதுரை ரயில்வே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


பால்துரைக்கு கொரோனா


இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறப்பு எஸ்.ஐ., பால்துரைக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-ஜூலை-202017:14:57 IST Report Abuse
தமிழ்வேல் போதிய பாதுகாப்புகள் இல்லாமல் விசாரணை நடந்துள்ளது.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
24-ஜூலை-202012:26:57 IST Report Abuse
Lion Drsekar மன்னிக்கவும் இந்த செய்தி யாருக்கு ? மக்களுக்கு என்றால் அறவே மறந்து விட்டார்கள் தற்போது நாட்டின் ஒரே பிரச்னை பல தாரம் ?? இதற்கு வித்திட்டவனுக்கும் நாம் நினைவு சின்னம் வைத்து இருக்கிறோம் என்பதில் பெருமை படவேண்டும் . வந்தே மாதரம்
Rate this:
Cancel
Sundar - Chennai,இந்தியா
24-ஜூலை-202011:59:43 IST Report Abuse
Sundar கொரோனாவது தண்டனையை சீக்கிரமா கொடுக்கட்டும்.
Rate this:
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
24-ஜூலை-202015:07:26 IST Report Abuse
தமிழ்வேல் போதாது.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X