மரக்கன்று நடும் நிகழ்ச்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மரக்கன்று நடும் நிகழ்ச்சி

Added : ஜூலை 24, 2020
Share

கரூர்: அரவக்குறிச்சி அருகில், மலைக்கோவிலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், பசுமைக்குடி தன்னார்வ இயக்கம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சூழல் மன்றம் சார்பில், மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். 50 வகையான பழ மரக்கன்றுகள் பள்ளி வளாகத்தில் நடப்பட்டன. பெற்றோர், மாணவர்கள், பசுமைக்குடி தன்னார்வ இயக்கத்தினர் இணைந்து, முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து, மரக்கன்றுகளை ஆர்வமுடன் நட்டனர். நிகழ்ச்சியில், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X