பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே வீதியில் மூவருக்கு கொரோனா: 14 நாட்கள் சாலை அடைப்பு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

கரூர்: கரூரில், ஒரே வீதியில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், 14 நாட்கள் சாலை அடைக்கப்பட்டு இருக்கும் என, நகராட்சி அதிகாரிகள் கூறினர். கரூர், அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில், 80 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கரூர் அரசு காலனியை சேர்ந்த, 25 வயது ஆண், கரூர் தோகைமலையில், 37 வயது ஆண், கரூர் பஞ்சமாதேவியை சேர்ந்த, 56 வயது ஆண், கரூர் காளியப்பனூரை சேர்ந்த, 55 வயது ஆண், கரூர் கரடிபட்டி எம்.எஸ்.சி நகர், 8 வயது சிறுமி, கரூர் அண்ணாகாலனி, 19 வயது ஆண், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த, 35 வயது ஆண், பழைய திண்டுக்கல் சாலையை சேர்ந்த, 32 வயது ஆண், காமராஜபுரம், 44 வயது ஆண், கரூர் கணேஷ் நகர், 15 வயது சிறுவன் உட்பட, 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், கரூர் திண்டுக்கல் பழைய சாலையில் டீக்கடை வைத்திருப்பவர், லேமினேஷன் போட்டோ கடையை சேர்ந்த ஒருவர், அங்குள்ள மேன்ஷனில் தங்கியுள்ள ஒருவர் என மூன்று பேருக்கு, நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டது. அந்த சாலை நேற்று காலை மூடப்பட்டது. சாலையின், இரண்டு புறங்களிலும் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டன. அந்த சாலையில் இயங்கி வந்த, டாஸ்மாக் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த சாலை, 7 முதல், 14 நாட்கள் வரை மூடப்பட்டு இருக்கும் என, நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X