பொது செய்தி

தமிழ்நாடு

ஜவுளி நிறுவன பணியாளர் வாகனங்களில் ஆய்வு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

கரூர்: கரூர் -திருச்சி தேசிய நெடுஞ்சாலை கோடங்கிப்பட்டி பிரிவு, சேலம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பெரிய வளைவு, திருக்காம்புலியூர் ரவுண்டானா, மண்மங்கலம் ஆகிய இடங்களில், ஜவுளி உற்பத்தி நிறுவனங்களுக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில், கலெக்டர் அன்பழகன் ஆய்வு மேற்கொண்டார்.


அப்போது, அவர் கூறியதாவது: மாவட்டத்தில் இயங்கிவரும் ஜவுளி உற்பத்தி தொழிற்சாலைகள், கொசுவலை உற்பத்தி தொழிற்சாலைகள், பிற தொழில் நிறுவனங்களில் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை ஆய்வு மேற்கொள்ள சம்பந்தப்பட்ட தாசில்தார், வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிற்சாலைகளை கண்காணிக்க அரசு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆய்வுக்கு வரும்போது, அரசு விதிமுறைகளை மீறி செயல்படுவது கண்டறியப்பட்டால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அந்நிறுவனத்துக்கு, 'சீல்' வைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார். ஆர்.டி.ஓ., பாலசுப்ரமணி, தாசில்தார்கள் அமுதா, கண்ணன் (மண்மங்கலம்) உட்பட பலர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X