பொது செய்தி

தமிழ்நாடு

ஒற்றை இலக்கத்தில் தொற்று பாதிப்பு குறையும்: போக்குவரத்துத்துறை அமைச்சர்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

கரூர்: ''கரூர் மாவட்டத்தில், மீண்டும் தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் குறையும்,'' என, அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.


கரூர், கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற, போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது: கரூர் மாவட்டத்தில், ஒற்றை இலக்காக இருந்த கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை, சமீபகாலமாக இரட்டை இலக்க எண்ணாக மாறியுள்ளது. இதை கட்டுப்படுத்த, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், கொசுவலை தயாரிப்பு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள், முகக்கவசம் அணிந்து பணிபுரிகின்றனரா, கிருமிநாசினி முறையாக தெளிக்கப்படுகிறதா, சமூகவிலகல் முறையாக கடைப்பிடிக்கப்படுகிறதா என்பதை, அரசுத்துறை அலுவலர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் தொற்று பாதித்த, 115 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக, ஓசூர் சென்று வந்த இரு நபர்கள் மூலமே, 20 பேருக்கு மேல் தொற்று பரவியிருக்கிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால், மீண்டும் ஒற்றை இலக்கத்தில் தொற்று பாதிப்பு குறையும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X