பொது செய்தி

தமிழ்நாடு

தரிசு நிலம் மேம்பாட்டு திட்டம்: விண்ணப்பிக்க அழைப்பு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

கரூர்: தரிசு நிலங்களை, சாகுபடிக்கு தகுந்த விளைநிலங்களாக மாற்றும் சிறப்பு தொகுப்பு திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.


இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களை சாகுபடிக்கு தகுந்த, விளைநிலங்களாக மாற்றும் சிறப்பு தொகுப்பு திட்டம், கரூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தில், தரிசு நிலங்களை விளைநிலங்களாக மாற்றலாம். அதில், 110 ஹெக்டேர் சிறு தானியங்கள், 150 ஹெக்டேர் பயறு வகைகள், 75 ஹெக்டேர் எள் பயிரிட இலக்கு பெறப்பட்டுள்ளது. ஒரு ஹெக்டேர் பரப்பிற்கு, அதிகபட்சமாக சிறுதானியங்கள் மற்றும் எள் பயிரிட, 10 ஆயிரம் ரூபாய், பின்னேற்பு மானியம் மற்றும் பயறு வகை பயிரிகள் பயிரிட, 9,250 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகள் மற்றும் அதற்கு மேலும் சாகுபடி செய்யப்படாமல், தரிசாக உள்ள நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவதற்கு, தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நில உரிமை ஆவணம், நிலம் தரிசாக உள்ளது என, கிராம நிர்வாக அலுவலர் சான்று, வங்கி கணக்கு புத்தகம் நகல் ஆகியவையுடன் அணுக வேண்டும். மேலும், வேளாண் விரிவாக்க மையம் மூலம் விதைகள், உயிர் உரம் மற்றும் நுண்ணூட்ட உரம் மானியத்தில் வழங்கப்படும். பின்னேற்பு மானியமாக, புதர்செடிகள் அகற்றல், நிலம் சமன்படுத்துதல், உழவு பணி மேற்கொள்ளுதல், விதைப்பு இயந்திரம் கொண்டு விதைத்தல் போன்ற பணிகளுக்கு மானியம், விவசாயிகளின் வங்கி கணக்கில் வைக்கப்படும். இது குறித்து விபரங்களுக்கு, வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X