சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் இறப்பில் சந்தேகம்: நண்பர்கள் மீது தந்தை புகார்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

குளித்தலை: குளித்தலை அடுத்த, ராஜேந்திரம் பஞ்., வாலாந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாய கூலி தொழிலாளி முருகன், 57. இவர் மகன் ராஜேந்திரன், 35, திருமண விழாக்களில், சாப்பாடு பரிமாறும் சப்ளையராக, 20 நபர்களை வைத்து தொழில் செய்து வந்தார். கடந்த, 21ல் மதியம், 3:00 மணியளவில் குளித்தலை வாய்க்கால் மேட்டு தெருவை சேர்ந்த இவருடைய நண்பர்கள் சுக்கன், செந்தில்குமார், தவசி, ராஜா ஆகியோர் குடும்ப பிரச்னை சம்பந்தமாக ராஜேந்திரனை அழைத்து சென்றனர். அன்று இரவு வீட்டுக்கு வரவில்லை, இவருடைய நண்பர்களையும் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம், பெட்ட வாய்த்தலை தென்கரை பாசன வாய்க்காலில், இறந்த நிலையில் ராஜேந்திரன் சடலம் இருந்துள்ளது. பெட்டவாய்த்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், என் மகன் இறப்பில் அழைத்து சென்ற நண்பர்கள் மீது சந்தேகம் இருப்பதாக, வாலிபரின் தந்தை மற்றும் கிராம பொது மக்கள், குளித்தலை, பெட்டவாய்த்தலை போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X