சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிப்பர் டிராக்டரில் மணல் கடத்தல்: டிரைவர் கைது; வாகனம் பறிமுதல்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

குளித்தலை: அரசு அனுமதி இல்லாமல், டிராக்டரில் வாரி மணல் கடத்தியது தொடர்பாக, டிரைவர் கைது செய்யப்பட்டார். வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. குளித்தலை அடுத்த, சேர்வைகாரன்பட்டி தலைவாசல் நான்கு வழிச்சாலையில், நேற்று முன்தினம் பாலவிடுதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, வீர கவுண்டம்பட்டியை சேர்ந்த தங்கராஜ் மகன் பழனிவேல், 40, அவருடைய அண்ணன் முள்ளிப்பாடி பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கருப்புசாமி, 48, ஆகியோர் டிப்பர் டிராக்டரில், காட்டு வாரிமணல் ஏற்றிக்கொண்டு சென்றனர். போலீசார் தடுத்து நிறுத்தும் போது, டிரைவர் ஓடினார். போலீசார் விரட்டி பிடித்தனர். பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து, டிரைவர் பழனிவேலை கைது செய்தனர். முன்னாள் பஞ்., தலைவர் கருப்புசாமி தலைமறைவாக உள்ளார். டிப்பர் டிராக்டர் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X