பொது செய்தி

தமிழ்நாடு

தூய்மை பணியாளருக்கு கொரோனா; டவுன் பஞ்., அலுவலகம் மூடல்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

ப.வேலூர்: தூய்மை பணியாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், ப.வேலூர் டவுன் பஞ்., அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது. ப.வேலூர் டவுன் பஞ்.,க்குட்பட்ட பகுதிகளில், 18 வார்டுகள் உள்ளன. கொரோனோ தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து, டவுன் பஞ்., அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் என, 100க்கும் மேற்பட்டோர் கொரோனோ தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கடந்த இரு தினங்களுக்கு முன், கவுண்டம்பாளையம் காலனி பகுதியில் வசித்து வரும் தூய்மை பணியாளர் ஒருவருக்கு, கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து, அவரை ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, அவரது குடியிருப்பு பகுதி மற்றும் டவுன் பஞ்., அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. டவுன் பஞ்.,அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டது. மேலும், தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்களுக்கு, கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X