பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு; தொழிலாளி உயிரிழப்பு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

நாமக்கல்: மாவட்டத்தில், கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் உயிரிழந்தார். நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோட்டை சேர்ந்த லாரி டிரைவர் மற்றும் குமார பாளையத்தை சேர்ந்த, 59 வயது பெண் கொரோனாவுக்கு ஏற்கனவே பலியாகி உள்ளனர். இந்நிலையில், பள்ளிபாளையத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளியான, 61 வயது ஆணுக்கு கடந்த, 12ல் சளி மற்றும் காய்ச்சல் ஏற்பட்டது. அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சையெடுத்துக் கொண்டார். இருப்பினும் குணமாகாத காரணத்தால், 16ல் பள்ளிபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 18ல் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சர்க்கரை நோயும் இருந்ததால், டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு இறந்தார். நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை, மூன்றாக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X