பொது செய்தி

தமிழ்நாடு

தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு ஆய்வு மேற்கொண்டார். இதுகுறித்து, அவர் கூறியதாவது: காவேரி நகர், விட்டலபுரி, ராகவேந்திரா தெரு, மாரக்காள்காடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், அப்பகுதிகள் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டன. இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு, தேவையான உதவிகளை நகராட்சி பணியாளர்கள் செய்து வருகின்றனர். வீட்டு குப்பை உள்ளிட்ட கழிவுகளை, 'எல்லோ பேக்' எனப்படும் மஞ்சள் நிற பையில் பெறப்பட்டு அவை அழிக்கப்படுகின்றன. அனைவருக்கும் வெப்பமானி உதவியுடன் பரிசோதனை செய்யப்படுகிறது. கிருமி நாசினி மருந்து தினமும், நான்கு முறை தெளிக்கப்படுகிறது. சின்னப்பநாயக்கன்பாளையம் அரசு பள்ளியில், 12 பேர், புத்தர் தெரு பள்ளியில் நகராட்சி மின் மயான ஊழியர்கள், ஐந்து பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X