பொது செய்தி

தமிழ்நாடு

மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், மேலும், 40 பேருக்கு கொரோனா தெற்று உறுதிசெய்யப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில், நேற்று முன்தினம் வரை, 395 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர். இவர்களில், இருவர் மதுரையை சேர்ந்தவர்கள் என்பதாலும், ஒருவர் சேலத்தை சேர்ந்தவர் என்பதாலும் அவர்கள், மூன்று பேரின் பெயர் பட்டியல், நாமக்கல் மாவட்டத்தில் இருந்து நீக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை, 392 ஆக குறைந்தது. இதற்கிடையே நேற்று, சுகாதார ஆய்வாளர்கள் இருவர் உள்பட, மேலும், 40 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாணிக்கம்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், ஆய்வாளராக பணியாற்றி வரும், 55 வயது ஆண், பிள்ளாநல்லூர் ஆரம்ப சுகதார நிலையத்தில் சுகாதார ஆய்வாளராக பணியாற்றி வரும், 31 வயது ஆண், ஐந்து சிறுவர்கள், இரு சிறுமிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர நாமக்கல், தாட்டான்குட்டை, மாணிக்கம்பாளையம், குமாரபாளையம், சிங்களாந்தபுரம், திருச்செங்கோடு, சேந்தமங்கலம், மோகனூர், வெடியரசம்பாளையம், பள்ளிபாளையம் எஸ்.பி.பி.,காலனி, பொத்தனூர், கந்தம் பாளையம், ப.வேலூர், காளிப்பட்டி, ஓலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த, எட்டு பெண்கள் மற்றும் 23 ஆண்கள் என மொத்தம், 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 432 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X