பொது செய்தி

தமிழ்நாடு

மருத்துவமனைகளுக்கு கலெக்டர் அறிவுரை

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நோய்த்தொற்று பரவலை தடுக்க, மாவட்ட நிர்வாகம், கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நோய்த்தொற்று அறிகுறிகளுடன் வருபவர்கள் குறித்த விபரங்களை சுகாதாரத்துறைக்கு தெரிவிப்பதில், தனியார் மருத்துவமனைகள், மருத்துவர்கள் காலதாமதம் செய்கின்றனர். இதனால், அவர்களுக்கு பரிசோதனை, சிகிச்சை அளிப்பதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே, தனியார் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் தங்களிடம் சிகிச்சை பெற வருகின்ற நோயாளிகளுக்கு நோய்த்தொற்றிற்கான அறிகுறிகள் தென்பட்டால் அவர்களின் விபரங்களை உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது மாவட்ட கட்டுப்பாட்டு அறை எண், 1077 அல்லது 8220402437 என்ற மொபைல் எண்ணிற்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, கலெக்டர் மெகராஜ் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X