சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ. 1 லட்சம் மதிப்பிலான மரங்கள் வெட்டி கடத்தல்

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

நாமக்கல்: பொட்டிரெட்டிப்பட்டி துவக்கப்பள்ளியில், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரிக்கின்றனர். எருமப்பட்டி ஒன்றியம், பொட்டிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். தலைமையாசிரியராக ஆரோக்கிய சௌத்ரிராஜ் பணியாற்றி வருகிறார். பள்ளி வளாகத்தில் தேக்கு, வேம்பு மரங்கள், 20க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்தன. கடந்த, 18ல் பள்ளியில் இருந்த, எட்டு தேக்கு மரங்களும், மூன்று வேப்ப மரங்களும் வெட்டப்பட்டு லாரிகளில் எடுத்து செல்லப்பட்டுள்ளன. அதை கண்ட அப்பகுதி மக்கள், நாமக்கல் எம்.பி., சின்ராஜூக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்து விசாரணை செய்தார். மேலும், சேந்தமங்கலம் தாசில்தார் ஜானகி, கல்வித் துறை அதிகாரிகளும் அங்கு வந்தனர். மரங்கள் வெட்டப்பட்டது குறித்து பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் விசாரித்தனர். ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேலான மரங்கள் வெட்டி விற்பனை செய்யப்பட்டுள்ளதால், ஆர்.டி.ஓ., மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோர் விசாரிக்கின்றனர். மாவட்ட கல்வி அலுவலர் உதயகுமார் கூறியதாவது: மரங்கள் வெட்டியது குறித்து புகார் வந்துள்ளது. அது தொடர்பாக, தலைமையாசிரியர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரிடம் விசாரணை நடத்தப்படும். தவறுகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X