பொது செய்தி

தமிழ்நாடு

திருமணத்திற்கு சென்று வந்த 12 பேருக்கு கொரோனா

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

ராசிபுரம்: வெண்ணந்தூர் பகுதியில் திருமணத்திற்கு சென்று வந்த, 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் கடந்த, 10 நாட்களாக கொரனோவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ராசிபுரம் பகுதியில் கடந்த, மூன்று நாட்களுக்கு முன், ஐந்து பேருக்கு கொரனோ தொற்று உறுதிசெய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெண்ணந்தூர் ஒன்றியம், ஓலைப்பட்டி கிராமம், நெசவாளர் காலனியிலிருந்து, திருச்செங்கோடு கொக்கராயன்பேட்டைக்கு சில நாட்களுக்கு முன் திருமண நிகழ்ச்சிக்கு சென்று வந்த, இருவர் காய்ச்சலால் அவதிப்பட்டனர். அவர்களுக்கு பரிசோதனை செய்தபோது, கொரோனா உறுதியானது. இதையடுத்து அவருடன் திருமணத்தில் உடனிருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிந்தது. தொடர்ந்து, அப்பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்.பி., சக்திகணேசன் அறிவுரைபேரில், இப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், ட்ரோன் மூலம் மக்களை கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X