பொது செய்தி

தமிழ்நாடு

குளிரூட்டப்பட்ட சவக்கிடங்கு கட்டுமான பணி நிறைவு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் குளிரூட்டப்பட்ட சவக்கிடங்கு பணிகள் நிறைவு பெற்றுள்ளன. குமாரபாளையம், போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடக்கும் சாலை விபத்துகளில் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை, பிரேத பரிசோதனை செய்யும் வரை சவக்கிடங்கில் வைக்க வேண்டும். குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சவக்கிடங்கு இல்லாததால், ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சடலங்கள் கொண்டு செல்லப்படும். இதையடுத்து, பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று, அரசு மருத்துவமனையில் குளிரூட்டப்பட்ட சவக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, தலைமை டாக்டர் பாரதி கூறியதாவது: சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை அரசு ஏற்று குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் குளிரூட்டப்பட்ட சவக்கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, ஆறு சடலங்கள் வரை பாதுகாக்கலாம். கட்டுமானப்பணி, குளிரூட்டப்பட்ட சவப்பெட்டிகள் உள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X