பொது செய்தி

தமிழ்நாடு

2,660 டன் பச்சரிசி வரவழைப்பு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

நாமக்கல்: பஞ்சாப்பில் இருந்து, சரக்கு ரயிலில், ரேஷன் பச்சரிசி நாமக்கலுக்கு வரவழைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் செயல்படும் ரேஷன் கடைகளுக்கு தேவையான ரேஷன் அரிசி, தஞ்சாவூர், திருவாரூர், கும்பகோணம் மாவட்டங்களில் இருந்தும், பஞ்சாப், தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் சரக்கு ரயிலில் வரவழைக்கப்படும். அதேபோல், கோழிப்பண்ணைகளுக்கு தேவையான மூலப்பொருட்கள் வெளி மாநிலங்களில் இருந்து வாங்கி வரப்படும். அந்த வகையில் நாமக்கல் மாவட்ட ரேஷன் கடைகளுக்கு தேவையான, 2,660 டன் பச்சரிசி மூட்டைகள், பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் இருந்து, 42 வேகன்கள் கொண்ட சரக்கு ரயிலில் வரவழைக்கப்பட்டன. அவை, 120க்கும் மேற்பட்ட லாரிகளில் ஏற்றப்பட்டு, நுகர்பொருள் வாணிப கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X