பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கில் சுற்றித் திரிந்த 153 பேர் மீது வழக்கு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

நாமக்கல்: கொரோனா வைரஸ் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவிற்கு கட்டுப்படாமல் அவசியமின்றி சுற்றித்திரிந்தவர்கள் மீது, நேற்று, 153 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 182 நபர்கள் கைது செய்யப்பட்டு, 90 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் மார்ச், 25 முதல், கடந்த, 23 வரை, 10 ஆயிரத்து, 655 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 14 ஆயிரத்து, 152 பேர் கைது செய்யப்பட்டு, 5,354 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், மாவட்டத்தில், 23 இடங்களில் முகக்கவசம் அணியாமல் வந்த, 403 பேருக்கு கொரோனா தொற்று குறித்த விழிப்புணர்வு அறிவுரை வழங்கப்பட்டது. மேலும், வெண்ணந்தூர் அடுத்த ஓலப்பட்டி மற்றும் சேந்தமங்கலம் கடைவீதி உள்ளிட்ட, 'சீல்' வைக்கப்பட்ட, 116 பகுதிகளில், 'ட்ரோன்' மூலம் கண்காணித்து விதிகளை மீறி வெளியே சுற்றித்திரிந்த, 10 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு, எஸ்.பி., சக்தி கணேசன் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X