பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு

Added : ஜூலை 24, 2020
Share

பள்ளிபாளையம்: மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில், இந்தாண்டு பாசனத்திற்கு எப்போது திறக்கப்படும் என, விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். பள்ளிபாளையத்தில், களியனூர், சமயசங்கிலி, எலந்தகுட்டை, ஆலாம்பாளையம்,மோளகவுண்டம்பாளையம், சின்னார்பாளையம் மற்றும் பல பகுதிகளில், மேட்டூர் கிழக்குகரை வாய்க்காலில் தண்ணீர் வரும் போது, இதனை பயன்படுத்தி, 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கர் நெல், பாசன சாகுபடி நடக்கிறது. ஆண்டுதோறும் நெல் சாகுபடிக்கு ஆகஸ்ட் மாதத்தில், தண்ணீர் திறப்பது வழக்கம். கடந்தாண்டு பாசனத்திற்கு வாய்க்காலில், ஆக, 14ல் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டது. தற்போது, காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பருவமழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்தும் அதிகரித்து வருகிறது. இதனால், இந்தாண்டு எப்போது பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என, விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X