சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பங்க் அருகே காரில் தீப்பிடித்ததால் பரபரப்பு

Added : ஜூலை 24, 2020
Share
Advertisement

திருச்செங்கோடு: திருச்செங்கோட்டில், பங்க் அருகே, காரில் தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில், ஆட்டோ கன்சல்ட்டிங் நடத்தி வருபவர் பிரகாஷ், 42. இவர், நேற்று மதியம், 2:30 மணியளவில், மாருதி ஜென் காரில், வேலூர் சாலை, டி.சி.எம்.எஸ்., பங்க்கிலிருந்து, வெளியே வந்த போது, காரின் இன்ஜின் பகுதியில் தீப்பிடித்தது. இதைப் பார்த்த, பங்க் ஊழியர்கள் விரைந்து வந்து தீயணைப்பு கருவிகள் மூலம் தீயை அணைக்க முயன்றனர். இதற்குள், தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறை நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையிலான வீரர்கள், முழுமையாக எரிவதற்கு முன், காரில் பற்றிய தீயை அணைத்ததால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சில அடிகள் தொலைவில், காஸ் மற்றும் பெட்ரோல் பங்க் இருந்த நிலையில் கார் தீப்பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. விபத்துக்கான காரணம் குறித்து, திருச்செங்கோடு நகர போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X